ரூ.25 லட்சத்தில் ஆரோக்கிய மையம்-அப்துல் வகாப் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

நெல்லையில் ரூ.25 லட்சத்தில் ஆரோக்கிய மைய கட்டிடம் அமைப்பதற்கான பணியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

Update: 2022-10-13 18:55 GMT

நெல்லையில் ரூ.25 லட்சத்தில் ஆரோக்கிய மைய கட்டிடம் அமைப்பதற்கான பணியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

நகர்ப்புற ஆரோக்கிய மையம்

நெல்லை சந்திப்பு உடையார்பட்டி மாநகராட்சி ரெங்கநாதன் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.25 லட்சத்தில் நகர்ப்புற ஆரோக்கிய மையம் கட்டப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார். நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மாநகர துணை செயலாளர் மூளிகுளம் பிரபு, தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் லெனின், உதவி பொறியாளர் சிவசுப்பிரமணியன், மாநகர நல அலுவலர் ஆனிகுயின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இலவச சைக்கிள்

நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. கல்வி சங்க பொருளாளர் பி.டி.சிதம்பரம் தலைமை தாங்கினார். செயலாளர் செல்லையா வரவேற்றார். இதில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 216 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஏ.எல்.எஸ்.சண்முகம் வாழ்த்தி பேசினார். முடிவில் தலைமை ஆசிரியர் உலகநாதன் நன்றி கூறினார். ஆசிரியர் சொக்கலிங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

உலமாக்களுக்கு சைக்கிள்

நெல்லை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அப்துல் வகாப் எம்.எல்.ஏ கலந்து கொண்டு 522 உலமாக்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா, மாவட்ட அரசு காஜி முகமது கசாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நெல்லை மாநகர தி.மு.க. துணை செயலாளர் மூளிகுளம் பிரபு, தாசில்தார் பத்மநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்கள் விஜய் ஆனந்த், சங்கர், ஜமாத்துல் உலமாக்கள் சபை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்