அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்

பாப்பாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-08-12 17:38 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே மலையூர் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பகுதி குழு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு பகுதி குழு தலைவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். குழு செயலாளர் லோகநாதன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சின்னசாமி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க பகுதி தலைவர் சின்னசாமி, தொகுதி செயலாளர் சக்திவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட தலைவர் ஜீவானந்தம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாநாட்டில் தலைவராக சிலம்பரசன், செயலாளராக மணிகண்டன், பொருளாளராக ருத்ரமூர்த்தி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். பாப்பாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டார தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். மலையூர்- மேட்டுக்கொட்டாய் தார் சாலை அமைக்க வேண்டும், மலையூருக்கு அரசு பஸ் விட வேண்டும். பாப்பாரப்பட்டியில் வேளாண்மை கல்லூரி தொடங்க வேண்டும். பிக்கிலி சாலையில் குதிரைக்கட்டு கணவாய் பகுதியில் சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும். பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் விளையாட்டு மைதானம் தொடங்க வேண்டும், சிட்கோ தொழிற்பேட்டை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேலாயுதம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்