விருதுநகர் அருகே சுகாதார பேரவை கூட்டம்

விருதுநகர் அருகே சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-13 19:43 GMT

விருதுநகர் யூனியன் கன்னிசேரி புதூர் ஆரம்ப சுகாதார நிலைய கூட்ட அரங்கில் வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆரோக்கிய ரூபன் ராஜ் சுகாதார பேரவை கூட்டம் பற்றி விரிவாக எடுத்துரைத்ததுடன் தீர்மானங்களையும் விளக்கி கூறினார். இதனை தொடர்ந்து சீனிவாசன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றி கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், யூனியன் கவுன்சிலர்கள் சங்கர சுபாராஜ், ராமமூர்த்தி, தர்மநாயக்கன்பட்டி, பாவாலி பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதார பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்