சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-09-29 17:59 GMT

வெள்ளியணை ஊராட்சி குமாரபாளையத்தில் கவின்மிகு கரூர் திட்டத்தின் ஒரு பகுதியாக குப்பையில்லா சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற உறுப்பினர் வெள்ளையம்மாள் முன்னிலை வகித்தார்.

ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பயிற்சிகள் ஆராய்ச்சி பவுண்டேஷன் அமைப்பின் இயக்குனர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். இந்த அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி, தலைமை செயல் அலுவலர் நோபல் சந்திரசேகரன் ஆகியோர் குப்பை இல்லா சுகாதாரமான கிராமங்களை உருவாக்குதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

நிகழ்ச்சியின் நோக்கங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.

இதில், ஊராட்சியின் தூய்மை பணியாளர்கள், கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் பாலுசாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்