தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-01 21:40 GMT

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும், முதுநிலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் தயார் செய்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட தலைவர் டைட்டஸ் ஜான் போஸ்கோ தலைமை தாங்கினார். செயலாளர் பெர்னார்டு ராஜா முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் சிவகுமார், பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ஜோசுதாஸ் பாண்டியன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் சேரன்மாதேவி கல்வி மாவட்ட செயலாளர் விஜயகுமார், வள்ளியூர் கல்வி மாவட்ட தலைவர் பலவேசமுத்து, பொருளாளர் மரகதவள்ளி, மாநில செய்தி தொடர்பாளர் செல்வநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்