தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூரில் தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-11-01 17:51 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செந்தில்குமார், பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். செயலாளர் சிவவடிவு வரவேற்றார். ஜாக்டோ செய்தி தொடர்பாளர் வாரா மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 8 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். அரசு உயர்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை பராமரிக்கும் வகையில் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

முடிவில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்