மயங்கிய நிலையில் மீட்கப்பட்டவர் மருத்துவமனையில் சாவு

மயங்கிய நிலையில் மீட்கப்பட்டவர் மருத்துவமனையில் இறந்தார்.

Update: 2023-08-12 17:50 GMT

வந்தவாசி

மயங்கிய நிலையில் மீட்கப்பட்டவர் மருத்துவமனையில் இறந்தார்.

வந்தவாசி புதிய பஸ் நிலையம் அருகில் உடல் நிலை சரியில்லாமல் மயங்கிய நிலையில் கிடந்தார். அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் அசாரூதீன், வசிகரன், கேசவராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவசர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது பெயர் பாபு (வயது 54) என்பது தெரியவந்தது. ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பத தெரியவில்லை.

இதுகுறித்து வந்தவாசி வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்