சட்டவிரோதமாக இலங்கை தப்பி செல்ல முயன்றஇங்கிலாந்துகாரர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சட்டவிரோதமாக இலங்கை தப்பி செல்ல முயன்ற இங்கிலாந்துகாரர் மீதான வழக்கு விசாரணை தூத்துக்குடி கோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2022-12-23 18:45 GMT

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன் (வயது 47) என்பவரை கியூ பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி மடக்கி பிடித்தனர். அவர் மும்பையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. 75 நாடுகளுக்கு பயணம் செய்து உள்ள ஜோனதன் தோர்ன், தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்று உள்ளார். இது குறித்து கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோனதன் தோர்னை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் ஜெயிலில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட் குபேரசுந்தர் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செல்போன் நிறுவனங்களை சேர்ந்த அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு குபேரசுந்தர் ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்