மனைவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய மருந்து விற்பனை பிரதிநிதி கைது

மனைவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய மருந்து விற்பனை பிரதிநிதியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-26 18:45 GMT

நாகர்கோவில், 

மனைவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய மருந்து விற்பனை பிரதிநிதியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண் புகார்

முட்டம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

எனக்கும், தோவாளை பகுதியைச் சேர்ந்த சதீஷ் பெருமாள் (வயது 34) என்பவருக்கும் 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சதீஷ் பெருமாள் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். தற்போது குடும்ப பிரச்சினை காரணமாக நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.

மருந்து விற்பனை பிரதிநிதி கைது

நானும், எனது கணவரும் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் உள்ளன. இந்த வீடியோவை எனது கணவர் எடுத்து வைத்திருந்தார். அதை வைத்து தற்போது என்னை மிரட்டி வருகிறார். எனவே எனது கணவர் சதீஷ் பெருமாள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சைபர் கிரைம் போலீசுக்கு அறிவுறுத்தினார். பின்னர் சதீஷ் பெருமாள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மனைவியின் ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியதாக மருந்து விற்பனை பிரதிநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்