குழாயில் இருந்து திடீரென பீறிட்டு வெளியேறிய குடிநீர்

குழாயில் இருந்து குடிநீர் திடீரென பீறிட்டு வெளியேறியது.

Update: 2023-06-22 21:02 GMT

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த மாகாளிப்பட்டியில் காவிரி குடிநீர் செல்லும் பிரதான குழாய் உள்ளது. இந்த குழாயில் நேற்று திடீரென குடிநீர் பீறிட்டு வெளியேற தொடங்கியது. சிறிது நேரத்தில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. இதையறிந்து அங்கு வந்த மக்கள், வெளியேறிய தண்ணீரில் குளித்து துணிகளை துவைத்து சென்றனர். ஏதாவது ஒரு பகுதியில் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் அதை சரி செய்வதற்காக இந்த குழாயில் இருந்து வாழ்வு மூலமாக நீரை வெளியேற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்