பெண்ணிடம் தங்கசங்கிலி பறித்த வாலிபருக்கு 20 மாதம் ஜெயில்
பெண்ணிடம் தங்கசங்கிலி பறித்த வாலிபருக்கு 20 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
தூத்துக்குடியில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபருக்கு 20 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
ஜவுளிக்கடை
தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி குமரன் நகரை சேர்ந்தவர் போஸ்கோ ராஜா. இவர் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
இவருடைய மனைவி சகாய சித்ரா (வயது 52). இவர் கடந்த 11.5.22 அன்று இரவு ஜவுளிக்கடைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது மகளுடன் மீண்டும் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அவர் ஸ்டேட் வங்கி காலனி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த லூர்தம்மாள்புரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராஜா என்ற நாகூர் அனிபா மகன் லேடன் என்ற பின்லேடன் (19) என்பவர், சகாய சித்ரா கழுத்தில் கிடந்த ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 500 மதிப்புள்ள 7¼ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
ஜெயில்
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ரபிசுஜின் ஜோஸ் விசாரணை நடத்தி லேடன் என்ற பின்லேடனை கைது செய்தார்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சேரலாதன், குற்றம் சாட்டப்பட்ட லேடன் என்ற பின்லேடனுக்கு 20 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கண்ணன் ஆஜரானார்.
-----------