மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்ததொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்

மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-09-29 18:45 GMT

கோவில்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

கூலித் தொழிலாளி

கோவில்பட்டி அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவருடைய மகன் ரகு என்ற ரகுராமன் (வயது 30), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 17.01.2017 அன்று மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து உள்ளார்.

இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரகுராமனை கைது செய்தனர்.

10 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாதவராமானுஜம் குற்றம் சாட்டப்பட்ட ரகுராமனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அரசு வக்கீல் எல்லம்மாள், இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாய், போலீஸ் மகேசுவரி ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்