பெண்ணிடம் 15 பவுன் நகையை மோசடி செய்து விட்டு தலைமறைவாக இருந்த உறவினர் கைது

சாத்தான்குளத்தில் பெண்ணிடம் 15 பவுன் நகையை மோசடி செய்து விட்டு தலைமறைவாக இருந்த உறவினர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-11 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் கொத்துவா பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் யூசுப் மனைவி ஜாகிதா (வயது 57). இவரது உறவின ரான சாத்தான்குளம் தைக்கா தெருவை சேர்ந்த அபுபக்கர் மகன் முகம்மது யூசுப்அஜிம் (49) என்பவர் கூட்டுறவு வங்கியில் நகை அடமானம் வைத்தால் கடன்தள்ளுபடி ஆகிவிடும் என கூறி ஜாகிதாவிடம் இருந்து கடந்த ஆண்டு 15 பவுன் நகைகளை வாங்கியுள்ளார். பின்னர் அவர் நகைகளை வங்கியில் அடமானம் வைக்காமல் மோசடி செய்து கொண்டு தலைமறைவாகி விட்டார். இதுதொடர்பாக ஜாகிதா அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்சன் வழக்கு பதிவு செய்து முகம்மது யூசுப்அஜிம்மை தேடிவந்தார். ஓராண்டாக வெளியூர்களில் பதுங்கி இருந்த அவர் நேற்று சாத்தான்குளம் பஸ்நிலையம் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. உடனடியாக இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான போலீசார் சாத்தான்குளம் பஸ்நிலையத்திற்கு விரைந்து சென்று முகம்மது யூசுப்அஜிமை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்