மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவா் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவா் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-06-03 18:32 GMT

திருச்சி தில்லைநகர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 39). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கவுண்டம்பட்டியில் இருந்து குழுமணி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வாத்தியார் குளம் அருகே மண் மேட்டில் ஏறியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து முத்துக்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அங்கிருந்தவா்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முத்துக்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து முத்துக்குமாரின் தாய் அம்சவள்ளி கொடுத்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்