ஆலய கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

கன்னியாகுமரியில் ஆலய கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-08-06 18:45 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் ஆலய கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி தவறி விழுந்தார்

கன்னியாகுமரி வாவத்துறை கடற்கரை பகுதியில் குருசடி உள்ளது. இங்கு திருவிழாவையொட்டி கோபுரத்தின் உச்சியில் மின்விளக்கு அலங்காரம் செய்யும் பணி நடைபெற்றது.

இந்த பணியில் ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஆபிரகாம் (வயது 45) என்பவர் ஈடுபட்டார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பரிதாப சாவு

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஆபிரகாம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்