ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தகுரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது
ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது.;
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவகுடி கிராமத்தில் குரங்குகள் ஊருக்குள் புகுந்து அதிக அளவில் தொல்லை செய்து வந்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து குரங்குகளை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. அதில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குரங்குகள் சிக்கின. பின்னர் அந்த குரங்குகளை கூண்டுடன் ஆட்டோவில் ஏற்றி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் விசுவகுடி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.