விபத்தில் லாரி டிரைவர் பலி

வேலகவுண்டம்பட்டி அருகே வாகனம் மோதி லாரி டிரைவர் இறந்தார்.

Update: 2023-04-23 18:45 GMT

பரமத்திவேலூர்

லாரி டிரைவர்

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர், மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 57) லாரி டிரைவர். இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு பிரியா என்ற ஒரு மகளும், ஜீவா என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் மணி நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் இளநகரில் உள்ள கடைக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் சாயக்காடு பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சாவு

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மணி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்