மத்திய அரசை கண்டித்து ஜெயங்கொண்டத்திற்கு வந்தபிரசார கலைக்குழுவினருக்கு வரவேற்பு
மத்திய அரசை கண்டித்து ஜெயங்கொண்டத்திற்கு வந்த பிரசார கலைக்குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.;
மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கலை நிகழ்ச்சி மூலம் பிரசாரம் செய்து வரும் கலைக் குழுவினருக்கு ஜெயங்கொண்டத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மக்கள் ஒற்றுமை மேடை அரியலூர் மாவட்ட அமைப்பாளர் மணிவேல் தலைமை தாங்கினார். இதில் ஜெயங்கொண்டம் தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் சிவகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிர்வளவன், ம.தி.மு.க. மாவட்ட தலைவர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.