சென்னை வந்த ரெயிலில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம், வைர நகைகள் பறிமுதல்...!

சென்னை வந்த ரெயிலில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.;

Update: 2022-12-07 11:22 GMT

சென்னை,

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடைமேடை எண் 1ல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருடன் ரெயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை வந்த ஷிவமொக்கா விரைவு ரெயிலில் வந்த கோபால் என்ற பயணி சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்டார். இதையடுத்து, அவரது உடமைகளை ரெயில்வே போலீசார் சோதனையிட்டனர். அப்போது கோபாலின் பைகளில் இருந்து ரூ. 40 இலட்சம் ஹவாலா பணம் மற்றும் சேதமடைந்த வைர நகைகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, இந்த நகை மற்றும் பணத்திற்கு ஏதேனும் ஆவணம் உள்ளதா என்று அதனை எடுத்து வந்த கோபால் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் ஆவணம் எதுவும் இல்லாததை அடுத்து ரெயில்வே போலீசார் அனைத்தையும் பறிமுதல் செய்து கோபாலை ஆர்.பி.எப். காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்