மாம்பழம் சுவைக்க அறுவடை காலம் மிக விரைவில் - ஜி.கே.மணி

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. ஆலோசனை நடத்தியது.

Update: 2024-03-18 12:54 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க.கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி நிலவுகிறது.

தி.மு.க. தனது கூட்டணியை அறிவித்து, தொகுதி பங்கீட்டையும் நிறைவு செய்துள்ளது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறது. ஆனாலும் பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டப்படவே இல்லை. தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் உயர்மட்ட தலைமை நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதற்கிடையில், பா.ம.க. கௌரவத் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "பருவ காலத்தில் மாமரங்கள் பூ பூத்து குலுங்கும் மகிழ்ச்சியான அற்புதக் காட்சி. மாங்காய் காய்த்து "மாம்பழம்" சுவைக்க அறுவடை காலம் மிக விரைவில்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்