மாநில வாள்வீச்சு போட்டியில்ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் பள்ளி வெற்றி

மாநில வாள்வீச்சு போட்டியில் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் பள்ளி வெற்றி பெற்றது.;

Update: 2023-02-18 21:30 GMT

குமாி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான வாள்வீச்சு போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். சூப்பர் சீனியர் பிரிவில் மாணவர்கள் ஆஷிக் தனிநபர் பாயில் பிரிவில் வெண்கல பதக்கமும், ஆகாஷ் தனிநபர் பாயில் பிரிவில் மற்றொரு வெண்கல பதக்கமும், சீனியர் பிரிவில் செல்வ ஜீவன் தனிநபர் எப்பீ பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றனர். மேலும் குழு விளையாட்டுகளில் பவுல் ராஜ் மற்றும் அன்றனி ரோஷன் ஆகியோர் சேபர் பிரிவிலும், ஸ்டேன்லி எபன் மற்றும் சகாய அன்றோ ஆகியோர் பாயில் பிரிவிலும் தலா வெண்கல பதக்கங்களை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் தினேஷ், முதல்வர் முருகேசன், உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் மற்றும் வாள்வீச்சு பயிற்சியாளர் ஏஞ்சல் ஆகியோர் பாராட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்