தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே டி.அம்மாபேட்டை தென்பெண்ணை ஆற்றங் கரையோரம் சென்னம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி தென்பெண்ணை ஆற்றங்கரையில் பக்தர்கள் புனிதநீராடி அங்குள்ள பாறைகளை சாமியாக கருதி மஞ்சள், குங்குமம் தூவி பொறிகடலை, தேங்காய் உடைத்து பழங்களை வைத்து வழிபட்டனர். பின்னர் ஆடு, கோழிகளை பலியிட்டு அங்கேயே குடும்பத்துடன் சமைத்து சாப்பிட்டனர். ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தர்மபுரி, ஊத்தங்கரை, அரூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.