அரூர் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அரூர் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Update: 2022-11-17 18:45 GMT

அரூர்:

அரூர் பஸ் நிலையத்திற்கான இடம் மிகவும் குறுகலாக உள்ளதால் அங்கு பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையொட்டி பஸ் நிலையத்தின் உள்ளே, வெளியில் உள்ள கடைகளின் முன்புறம் அலங்கார வளைவுகள், பேனர்கள், சாலையோர கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு வாரம் முன்னதாகவே பேரூராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. எனினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் பேரூராட்சி சார்பில் நேற்று அதிகாரிகள் பஸ் நிலைய பகுதிக்கு சென்று அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பணியின்போது பேரூராட்சி துணைத்தலைவர் சூர்யா தனபால், செயல் அலுவலர் கலைராணி ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்