மகிழ்ச்சி தெரு கொண்டாட்டம்: அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மகிழ்ச்சி தெரு கொண்டாட்ட நிகழ்ச்சி, வருகிற 30-ந்தேதி மற்றும் மே 7, 14, 21-ந்தேதிகளில் நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

Update: 2023-04-27 06:44 GMT

சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு முதல் ஜி.பி.ரோடு சந்திப்பு வரை உள்ள பகுதியில் மகிழ்ச்சி தெரு கொண்டாட்ட நிகழ்ச்சி, வருகிற 30-ந்தேதி மற்றும் மே 7, 14, 21-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. அன்றைய தினங்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்