பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அவருக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்;
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அவருக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
அன்பு சகோதரர் ரஜினிகாந்திற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ரஜினிகாந்த் நீண்ட ஆயுளோடும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.