கோத்தகிரி
இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். அமைப்பாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். கூட்டத்தில் அமைப்பின் தேசிய தலைவர் சிட்கோ ராஜேந்திரன், மாநில துணை செயலாளர் ஞானசேகர், மாநில அமைப்பாளர் சண்முகவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவில் 208 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என முடிவு செய்யப்பட்டது. தொடந்து நடந்த நிர்வாகிகள் தேர்வில் மாவட்ட தலைவராக சதீஷ்குமார், பொதுச்செயலாளராக கார்த்திக், அமைப்பாளராக ஆனந்த்குமார், கோத்தகிரி ஒன்றிய தலைவராக கணேஷ், பொதுச்செயலாளராக சண்முகம், நகர தலைவராக ஆனந்த் குமார், நகர செயலாளராக ஜீவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.