அனுமன் ஜெயந்தி விழா

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.

Update: 2022-12-24 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள ருக்மணி சத்திய பாமா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமிகள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதைமுன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் படத்திற்கு வடை மாலை, வெற்றிலை மாலை, துளசி மாலையால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சகஸ்ர நாம அர்ச்சனை, சுந்தரகாண்டம், ஆஞ்சநேயர் கீர்த்தனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்