அனுமன் ஜெயந்தி விழா
செங்கோட்டை ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.;
செங்கோட்டை:
செங்கோட்டை போலீஸ் நிலையம் அருகில் மேல்புறம் வீற்றிருக்கும் ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், துர்கா ஹோமம், சுதர்சன ஹோமம், ஆஞ்சநேயர் மூல மந்திர ஹோமம், தன்வந்திரி ஹோமம், 9 மணிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 11 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து இரவிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, மகேஷ்வரன் ஆகியோர் செய்து இருந்தனர்.