தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை

போடியில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-31 18:45 GMT

போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனி ஜெயம் நகரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவர், போடியில் தேவாரம் சாலையில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக இவர் உடல் நலக்குறைவால் அவதியடைந்தார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலை பரமசிவன் கோவில் பின்புறம் தோட்டத்தில் உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த குரங்கணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்