தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை

பெரியகுளம் அருகே தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-18 18:45 GMT

பெரியகுளம் அருகே உள்ள நேருநகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 48). இவர், பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். தொழிலில் சரிவர லாபம் கிடைக்கவில்லை என்று அவர் தனது குடும்பத்தினரிடம் கூறி வந்தார். இதனால் மனம் உடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்