தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

ஆதனக்கோட்டையில் மது குடிப்பதற்கு தாய் பணம் கொடுக்காத விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-02 18:26 GMT

தொழிலாளி

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் முத்துசாமி (வயது 22). கூலி தொழிலாளி. நேற்று இரவு முத்துசாமி அவரது தாய் அஞ்சம்மாளிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் முத்துசாமி இருந்து வந்தார்.

தற்கொலை

இதையடுத்து மது குடிப்பதற்கு தாய் பணம் கொடுக்க வில்லை என்ற விரக்தியில் வீட்டில் அருகே இருந்த மாமரத்தில் தூக்குப்போட்டு முத்துசாமி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அஞ்சம்மாள் ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவமூர்த்தி (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்