தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Update: 2023-05-28 19:12 GMT

பாபநாசம் மேலரஸ்தா மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கோகிலா. கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக கோகிலா பிரிந்து வாழ்ந்து வந்தார். மனைவி பிரிந்து சென்ற காரணத்தினால் ஆனந்த் மன உளைச்சலில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோகிலா பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அனிதா கிரேசி, சப்- இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்