தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்தார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பாதயாத்திரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் முத்துபாண்டி (வயது 31). தொழிலாளியான இவர், தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி முத்து விரைந்து வந்து முத்துப்பாண்டியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.