தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-04 19:32 GMT


விருதுநகர் சூலக்கரைமேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 50). கட்டிட தொழிலாளியான இவர் மனைவியுடன் அடிக்கடி பிரச்சினை செய்து வந்தார். இந்தநிலையில் அடிக்கடி மனைவியிடம் நான் சாகப்போகிறேன் என்று மிரட்டியும் வந்தார். சம்பவத்தன்று வீட்டிற்கு வந்தவர் மனைவி முருக லட்சுமியை வெளியே போக சொல்லிவிட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி முருகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்