தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தேனியில் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-09 18:45 GMT

தேனி பழைய போஸ்ட் ஆபீஸ் ஓடைத்தெருவை சேர்ந்த பாண்டிகுமாரவேல் மகன் பாப்புராஜன் (வயது 27). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த அபிநயாஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், 1½ ஆண்டுக்கு முன்பு அபிநயாஸ்ரீ தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் பாப்புராஜன் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் உள்ள பூஜை அறையில் போர்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதை பார்த்த அவருடைய தாயார் ஆதிலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தேனி போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்