தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Update: 2022-12-28 20:09 GMT

திருவையாறை அடுத்த அம்மன்பேட்டை மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி (வயது53). தொழிலாளியான இவருக்கு தனலட்சுமி (45) என்ற மனைவியும், இரண்டு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ராமசாமி தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த ராமசாமி நேற்று காலை அம்மன்பேட்டை அருகே நாகத்தி செல்லும் ரோட்டில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். இதுகுறித்து தனலட்சுமி நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமசாமி உடலை கைப்பற்றி திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்