தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Update: 2022-10-07 18:45 GMT

நாகை மாவட்டம் நாகூர் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது41). தொழிலாளியாக இவர் மனநிலை பாதி்க்கப்பட்டவர். கடந்த 4-ந்தேதி வீட்டில் இருந்து சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள ஒரு திரையங்கம் அருகே தூக்கில் தொங்கி்ய நிலையில் ஒருவர் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்து நாகூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பக்கிரிசாமி என்பதும், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பக்கிரிசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்