தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

காதல் தோல்வியால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-07-30 19:04 GMT

சாத்தூர், 

சாத்தூர் தாலுகா பெத்துரெத்துபட்டி காலனியை சேர்ந்தவர் சந்தான கருப்பசாமி (வயது 22). தீப்பெட்டி குச்சி தயார் செய்யும் ஆலையில் பணியாற்றி வந்தார். இவர் தனது உறவினர் பெண்ணை காதலித்து வந்ததாகவும், சமீப காலமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த சந்தானகருப்பசாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து சந்தான கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்