தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

நெகமத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-11 19:00 GMT
விருதுநகர் மாவட்டம், மம்சாபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 55). தொழிலாளி. இவரது மனைவி பொன்னுத்தாய் (45). இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகி மம்சாபுரத்தில் உள்ளனர். ஜெயபால் மனைவி பொன்னுத்தாயும் மம்சாபுரத்தில் வசித்து வருகிறார். ஜெயபால் மட்டும் கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள கொண்டேகவுண்டன்பாளையத்தில் தங்கி அங்குள்ள விவசாயி ஒருவர் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஜெயபால் குடும்பத்துடன் இல்லாமல் தனியாக இருப்பதை நினைத்து மனவேதனையுடன் காணப்பட்டு இருந்தார். இதனால் அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





Tags:    

மேலும் செய்திகள்