தூக்குப்போட்டு தொழிலாளிதற்கொலை
ஆம்பூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;
ஆம்பூர்
ஆம்பூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ஆம்பூர் டவுன் பி கஸ்பா பகுதியை சேர்ந்தவர் சத்யா (வயது 25). இவர் ஷூ கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் தன்னுடன் வேலை செய்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சத்யாவின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றார். இதனால் சத்யா மன உளைச்சலில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.