தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-19 18:32 GMT

கரூர் வெங்கமேடு காமராஜர் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 48). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜாவிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராஜா தனது வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்ட அவரது உறவினர்கள் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்