தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்தார்.
விருதுநகர் ரோசல்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 27). கூலித்தொழிலாளியான இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் பலரிடம் கடன் வாங்கி மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை இவரது பெற்றோர் கண்டித்த நிலையில் இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாண்டியன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.