கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூரில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-03-12 17:27 GMT

திருப்பூரில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கல்லூரி மாணவி தற்கொலை

திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்த திலகர்நகர் அருகே உள்ள மேல்நிலைப்பள்ளி ரோடு, செல்வ விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி தெய்வாத்தாள். இவர்களுக்கு ஹரிஸ்மா (வயது 18) என்ற மகள் இருந்தார். இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் தனி அறையில் மாணவி தூங்கச்சென்றார். நேற்று காலை 10 மணி வரை அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை. பலமுறை தட்டிப்பார்த்தும் மாணவி வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பழனிச்சாமி கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது அங்கு மாணவி ஹரிஸ்மா துப்பட்டாவில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைப்பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

வயிற்று வலி

இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மாணவி ஹரிஸ்மா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் வயிற்றுவலி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. திருப்பூரில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்