காதல் திருமணம் செய்த 2 வாரத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூரில் காதல் திருமணம் செய்துகொண்ட 2 வாரத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-03 18:02 GMT

திருப்பூரில் காதல் திருமணம் செய்துகொண்ட 2 வாரத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுமாப்பிள்ளை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன் மகன் கோபால் (வயது 21). கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி வினோதினி (வயது 25).

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இருவரும் திருப்பூர் சந்திராபுரம் முதல் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கோபாலின் பெற்றோரிடம் வினோதினி பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோரிடம் பேசும்படி கோபால் தனது மனைவியை வற்புறுத்தினார். இதற்கு மனைவி மறுத்து அருகில் இருந்த கத்தியை எடுத்து தனது கையில் கிழித்துக்கொண்டதாக தெரிகிறது. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த கோபால் இரவு அனைவரும் தூங்கிய பிறகு மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நல்லூர் போலீசார் கோபால் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் முடிந்த 2 வாரத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்