தூக்குப்போட்டு பெட்டிக்கடை உரிமையாளர் தற்கொலை
தூக்குப்போட்டு பெட்டிக்கடை உரிமையாளர் தற்கொலை
முத்துப்பேட்டையை அடுத்த கீழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமையன் (வயது40). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருக்கும், வண்டுவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த சரண்யா (38) என்பவருக்கும் கடந்த 9ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சரண்யா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவியை வீட்டிற்கு வருமாறு ராமையன் அழைத்துள்ளார். ஆனால் அவர் வரவில்லை. இதனால் விரக்தியில் இருந்த ராமையன் நேற்று காலை வீட்டின் பின்புறம் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராமையன் உறவினர்கள் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமையன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.