தூக்குப்போட்டு பெட்டிக்கடைக்காரர் தற்கொலை

தூக்குப்போட்டு பெட்டிக்கடைக்காரர் தற்கொலை செய்தார்.;

Update: 2023-05-03 20:01 GMT


விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50). இவர் இந்நகர் ராமர் கோவில் எதிரே பெட்டிக்கடை வைத்திருந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றுவிட்ட நிலையில் வீட்டில் ராஜ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவரது மகன் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்