10 பேருக்கு காதொலி கருவி
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 10 பேருக்கு காதொலி கருவி வழங்கப்பட்டது.
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் காதுகேளாதோருக்கு இலவச காதொலி கருவி வழங்கும் விழா நடைபெற்றது.
அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். டாக்டர் நதீம் அஹமத், முதுநிலை உதவி மருத்துவர் தன்வீர் அஹமத், உதவி மருத்துவர் தே.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 10 பேருக்கு காதொலி கருவி வழங்கப்பட்டது.