நகையை தவறவிட்ட பெண்ணிடம் ஒப்படைப்பு
நகையை தவறவிட்ட பெண்ணிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். அவரது மனைவி கல்பனா (வயது 37). இவர், கணவருடன் மோட்டார் சைக்கிளில் ஆற்காட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். ஓச்சேரி மக்லின் கால்வாய் அருகே செல்லும் போது தான் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை தவறவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவளூர் போலீசில் புகாா் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று வேறொரு வழக்கில் கிடைத்த தங்க நகையை அடையாளம் கண்டத்தில் இது கல்பனாவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி, கல்பனாவிடம் நகையை ஒப்படைத்தார். தொடர்ந்து அவர், போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.