கோவில் நிலம், ஐகோர்ட்டு வசம் ஒப்படைப்பு

தலைமை நீதிபதி முன்னிலையில் கோவில் நிலம், ஐகோர்ட்டு வசம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2023-08-27 20:39 GMT

மதுரை ஐகோர்ட்டு கிளை, ஒத்தக்கடை கிராமத்திற்கு முன்பாக அமைந்து உள்ளது. இந்த ஐகோர்ட்டு கிளை முன்பு, நரசிங்கம் கிராமம் கோபிநாத சாமி கோவிலுக்கு சொந்தமான 6.51 ஏக்கர் நிலம் உள்ளது. காலியாக இருக்கும் இந்த நிலத்தை, தற்போது ஐகோர்ட்டு கிளைக்கு குத்தகைக்கு விடப்பட்டு உள்ளது. அதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கா பூராவாலா முன்னிலையில் கோபிநாத சுவாமி கோவில் தக்கார் இளங்கோவன், ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் ஜோதிராமனிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆதிகேசவலு, கிருஷ்ணன் ராமசாமி, தனபால், ஸ்ரீமதி நாகர்ஜூன், சுரேஷ்குமார், இந்து சமய அறநிலைய துறை ஆணையர் முரளிதரன், கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் பிரவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். குத்தகைக்கு பெறப்பட்ட இந்த நிலம் ஐகோர்ட்டு மதுரை கிளை வாகனம் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்