மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.;

Update: 2023-02-25 19:29 GMT

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு மனநிலை பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றி கொண்டிருந்த ஆண் ஒருவரை, போலீசார் மீட்டு பெரம்பலூரில் உள்ள ஒரு கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர் பராமரிப்பில் இருந்த போது அளிக்கப்பட்ட சிகிச்சையில் குணமடைந்தார். இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது, அவர் அரியலூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அண்ணாதுரை (வயது 47) என்பது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் நேற்று வரவழைக்கப்பட்டனர். பின்னர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் மனு ரசீது பதிந்து, அண்ணாதுரையை அவரது உறவினர்களிடம் மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்